இந்தியா மீது கனடா நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரின் குற்றஞ்சாட்டு
2024-10-30 09:28:07

இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் தொடர்புடைய முக்கிய சிலர், கனடாவில் குற்ற நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர். சமீபத்தில், இந்தியாவின் தூதரகப் பணியாளர்கள் சிலர், மிரட்டல், பணம் பறிப்பு மற்றும் கொலை செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கனடா காவற்துறையினர்களால் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளனர் என்று கனடாத் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் அக்டோபர் 29ஆம் நாள் விசாரணை கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

கனடாவில் உளவு சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் அளித்து சீக்கிய பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரிகளில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருவராவர் என்று டேவிட் மோரிசன் தெரிவித்தார்.