சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தவறான கருத்துக்கள்
2024-10-30 10:31:53

அண்மையில், சில மேலை நாட்டுச் செய்தி ஊடகங்களும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய உளவு நிறுவனங்களும் "சீன உளவு அச்சுறுத்தல்" என்ற தவறான கருத்து ஒன்றை மீண்டும் பரப்புரை செய்வதுடன், "சீன இணைய திருடர் அமெரிக்க தொலைத்தொடர்பு வலைப்பின்னலில் நுழைகின்றன" என்று அவதூறு பரப்பின. தி வோல் ஸ்ட்ரீட் நாளேடு, நியூயார்க் டைம்ஸ் முதலியவை அண்மையில் தொடர்புடைய செய்தி அறிக்கைகளை பல கோணங்களில் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி ஊடகங்கள் தங்கள் செய்தி அறிக்கைகள் "புறநிலையானவை, நியாயமானவை" என்று கூறினாலும், உண்மையில் மேற்கோள் காட்டப்பட்ட "உண்மைகளுக்கு" சரியான மற்றும் நம்பகமான ஆதாரங்களை வழங்கவில்லை.

தி வோல் ஸ்ட்ரீட் நாளேடு உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் சீனாவுடனான அமெரிக்க போட்டியில் மிகவும் தீங்கு விளைவிக்கும் கருவியாக மாறியுள்ளன என்பதை இத்தகைய செய்தி அறிக்கைகள்  காட்டுகின்றன.

அமெரிக்க அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் சீனா மீதான நம்பிக்கையில்லாத சூழ்நிலையைத் தீவிரப்படுத்துவதும், சீனாவுக்கு எதிரான போட்டி மற்றும் பகைமை தொடர்பாக பொது மக்களின் ஒத்த கருத்துக்களை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கம். அதே வேளையில், அடுத்தக்கட்டமாக சீனாவின் மீதான அமெரிக்க அரசின் கொள்கைக்கு கடுமையான அடித்தளத்தை அமைக்கவும் முயற்சிக்கின்றன.

சில அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவுக்கு எதிரான அரசியல் "விளையாட்டை" உருவாக்கியுள்ளனர். தவறான குற்றங்களைத் தொடர்ந்து உருவாக்குவதன் மூலம் அமெரிக்காவில் சீனாவுக்கு விரோதமான ஒரு சூழ்நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி, அமெரிக்காவில் அப்பாவி மக்களை அரசியல் ரீதியில் பாதித்துள்ளன.