மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-19 விண்கலம் வெற்றிகரமாக ஏவுதல்
2024-10-30 10:41:10

னாவின் மனிதர்களை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-19 விண்கலம், பெய்ஜிங் நேரப்படி அக்டோபர் 30ஆம் நாள் காலை 04:27 மணிக்கு, வடமேற்கு சீனாவில் உள்ள ஜியு ச்சுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்தது. மூன்று விண்வெளி வீரர்களான சை ஷுச்சே, சுங் லிங்துங் மற்றும் வாங் ஹாவ்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர் என்றும், இந்த ஏவுதல் பணி ஒரு "முழுமையான வெற்றி" என்றும் ஜியு ச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தின் தளபதி சோ லிபங் கூறினார்.
ஷென்ஜோ-19 விண்கலம் சீனாவின் டியன்குங் விண்வெளி நிலையத்துடன் விரைவாக தானியங்கி இணைப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷென்சோ-19 விண்வெளி வீரர்கள் ஷென்சோ-18 விண்வெளி வீரர்களுடன் சுற்றுப்பாதையில் பணி சுழற்சியை முடித்த பின்னர் விண்வெளி நிலையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுமார் ஆறு மாதங்கள் டியன்குங்கில் தங்கி, டியன்ச்சோ-8 சரக்கு விண்கலம் மற்றும் மனிதர்களைக் ஏற்றிச்செல்லும் ஷென்சோ-20 விண்கலத்தின் வருகையைக் காண்பார்கள். மேலும் இக்காலக்கட்டத்தில், 86 விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சோதனைகள், புறவிண்கல செயல்பாடுகள், விண்வெளி குப்பைகளுக்கு எதிரான பாதுகாப்பு சாதனங்களை பொருத்துதல், புறவிண்கல பேலோடுகள் மற்றும் உபகரணங்களை நிறுவுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.