ஆஸ்திரேலியாவின் 131 பேர் மற்றும் நியூசிலாந்தின் 9 பேர் நாட்டிற்குள் நுழைய தடை: ரஷியா அறிவிப்பு
2024-10-30 18:20:22

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 131 குடிமக்கள் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த 9 குடிமக்கள் ரஷியாவிற்குள் நுழைய காலவரம்பின்றி தடை விதிப்பதாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் 29ஆம் நாள் தெரிவித்தது.

ரஷியாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இவ்விரு நாடுகள் தடை விதித்ததற்குப் பதிலடியாக, இந்த தடை அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் 131 பேரில், ராணுவ மற்றும் தொழிற்துறைக் கூட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் இடம்பெறுகின்றனர். நியூசிலாந்தின் 9 பேரில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது.