கடந்த செப்டம்ரில் சீனாவின் சரக்கு மற்றும் வர்த்தக சேவை விழுக்காடு வளர்ச்சி
2024-10-31 19:26:54

இவ்வாண்டின் செப்டம்பரில், சீனாவின் சர்வதேச சரக்கு மற்றும் வர்த்தக சேவையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 4இலட்சத்து 47ஆயிரத்து 820கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 5விழுக்காடு அதிகமாகும். சரக்கு வர்த்தகத் துறையில், ஏற்றுமதி 2இலட்சத்து 24ஆயிரத்து 950கோடி யுவானாகவும், இறக்குமதி ஒரு இலட்சத்து 62ஆயிரத்து 270கோடி யுவானாகவும் இருந்தன. சரக்கு வர்த்தக உபரி 62ஆயிரத்து 680கோடி யுவானாகும். மேலும், வர்த்தக சேவையின் ஏற்றுமதி தொகை, 24ஆயிரத்து 200கோடி யுவானாகவும், இறக்குமதி தொகை 36ஆயிரத்து 400கோடி யுவானாகவும் இருந்தன. அதன் வர்த்தக பற்றாக்குறை 12ஆயிரத்து 190கோடி யுவானாகும்.