சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு அதிகரிப்பு
2024-10-31 10:42:47

அக்டோபர் திங்கள் சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம், சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவைத் தொழில் கள ஆய்வு மையம் ஆகியவை 31ஆம் நாள் வெளியிட்டன. அவற்றில் அக்டோபரில் சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 50.1 விழுக்காடாகும். இது, கடந்த திங்களை விட 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இக்குறியீடானது, இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக 50 விழுக்காட்டுக்கும் கீழே காணப்பட்ட இக்குறியீடானது மீண்டும் விரிவாக்க வரம்பிற்குத் திரும்புவதும் இதுவே முதன்முறையாகும்.

தற்போதைய பொருளாதாரச் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக மாறியுள்ளது. பொருளாதார மீட்சிக்கான அடித்தளம் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒத்தமொத்தமாக, அக்டோபர் திங்களில், ஒட்டுமொத்த கொள்கைகளின் கட்டுப்பாட்டு பயன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் சந்தை உயிர்ச்சக்தி அதிகரித்துள்ளதோடு  விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இணைப்பு தெளிவாக காணப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சிக்கான இயக்காற்றல் சீராக வலுப்படுத்தப்பட்டுள்ளது.