© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பின்லாந்து அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப் அக்டோபர் 28ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் 4 நாட்கள் பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். மேலும், சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், பின்லாந்தைப் பொறுத்தவரை, சீனாவுடன் சீரான உறவை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானது. வர்த்தகம், வணிகம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று நம்பிக்கை அளித்து வருகின்றன. இதுவரை, சீனாவிலுள்ள பின்லாந்தின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 250 எட்டியுள்ளது. உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட சீனா முன்வைத்த முன்மொழிவுகள் நெடுநோக்கு தன்மை வாய்ந்தவை என்றார்.
மேலும், இப்பயணத்தின்போது, சீனாவின் வளர்ச்சிச் சாதனைகளை அவர் பார்வையிட்டார். பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பசுமை எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் பயன்தரும் ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். தவிரவும், தற்போது, உலகம் பல்வேறு அறைக்கூவல்களை எதிர்நோக்கி வருகிறது. பலதரப்பு ஒத்துழைப்புகள், வளர்ச்சிக்கான முக்கிய வழிமுறையாகும். ஐரோப்பிய-சீன உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பின்லாந்து ஆக்கமுடன் பங்காற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.