சீன விண்வெளி வீரர்களின் கடமை ஒப்படைப்பு
2024-11-02 18:46:18

சென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்களும் சென்சோ-19 விண்கலத்தின் விண்வெளி வீரர்களும் நவம்பர் முதல் நாள் கடமை ஒப்படைப்பு நிகழ்வு நடத்தி, சீன விண்வெளி நிலையத்தின் பொறுப்பை ஒப்படைத்தனர் என்று சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகம் அன்று வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, சென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் அனைத்து திட்டமிட்டுள்ள கடமைகளையும் முடித்து கொண்டு, நவம்பர் 4ஆம் நாள் பூமிக்குத் திரும்புவுள்ளனர்.