© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

உயிரின பல்வகைமைக்கான ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 16ஆவது மாநாடு கொலம்பியாவின் கலியில் நிறைவடைந்தது.
இம்மாநாட்டில் மூன்று ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டன. பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமுதாய மக்களை இணைக்கும் வகையில் துணை அமைப்புகளை உருவாக்குவது, ஆப்பிரிக்கர்களின் எதிர்கால தலைமுறையினரை, உயிரினப் பல்வகைமை பாதுகாவலராக பொது ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்வது, 2030ஆம் ஆண்டு வரையான பணி திட்டத்தை குடியிருப்புகளுக்கு வகுப்பது ஆகியவை இம்மூன்று ஒத்த கருத்துக்களாகும்.
12 நாட்கள் நீடித்த இம்மாநாட்டில் 600 கல்வியியல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அரசுத் தலைவர்கள், அலுவலர்கள், சமுதாயப் பிரமுகர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் அடங்கும் சுமார் 31 ஆயிரம் பேர் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.