சீன, ஸ்லோவாக்கியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2024-11-02 19:29:42

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர்  ராபர்ட் ஃபிகோவுடன் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75 ஆண்டுகளில் இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது. ஸ்லோவாக்கியாவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை பரவல் செய்து, நெடுநோக்கு பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியத்துக்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

ராபர்ட் ஃபிகோ கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சீனா மாபெரும் வளர்ச்சி சாதனைகளைப் பெற்று, பன்னாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. சீனாவுடன் இணைந்து உயர் நிலை பரிமாற்றத்தை மேலும் நெருக்கமாக்கி, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, ஒன்றுக்கொன்று தொடர்பு, பசுமையான எரிசக்தி, அடிப்படை வசதிகளின் கட்டுமானம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்க ஸ்லோவாக்கியா விரும்புவதாகவும், சீனாவுடன் இணைந்து சர்வதேச விவகாரங்களில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி. உலகளாவிய அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.