வெளிநாட்டுத் திறமைசாலிகள் சீனாவில் வளர்வதற்கு சீனா வரவேற்பு
2024-11-03 19:44:02

22வது சீனச் சர்வதேச திறமைசாலி பரிமாற்ற மாநாடு நவம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் ஷென் யீசின் அம்மையார் இம்மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதற்கான மேலும் ஆக்கப்பூர்வ, திறந்த மற்றும் பயன்மிக்க கொள்கையை நடைமுறைப்படுத்தி, சர்வதேச திறமைசாலி பரிமாற்றத்தை வலுப்படுத்தி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு திறமைசாலி மற்றும் அறிவுத்திறமை ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், சீன நவீனமயமாக்கம், உலகின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, பல்வகை திறமைசாலிகள் தங்களது திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் மேலும் பெரிய அரங்கை அமையும். வெளிநாடுகளிலிருந்து திறமைசாலிகளை உட்புகுத்துவதற்கான ஆதரவு மற்றும் உத்தரவாத அமைப்பு முறையை சீனா தொடர்ந்து மேம்படுத்தி, வெளிநாட்டு நிபுணர்களும், பல்வேறு திறமைசாலிகளும் சீனாவில் பணி புரிந்து வாழ்வதற்கு மேலும் தரமான சேவையை வழங்கும். உலகின் பல்வேறு இடங்களின் திறமைசாலிகள் சீனாவில் வளர்ந்து, சீன நவீனமயமாக்கத்தில் பங்கெடுப்பதை சீனா வரவேற்கிறது என்று தெரிவித்தார்.