இலங்கை கடவுச்சீட்டு பற்றாக்குறை தீர்க்க ஆன்லைன் கடவுச்சீட்டு முறைமை அறிமுகம்
2024-11-03 16:58:17

இலங்கையில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமையொன்றை இலங்கையின் குடிவரவு குடியகல்வு துறை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசின் தகவல் தொடர்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது வெற்று கடவுச்சீட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதை வழங்குவதில் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது,  கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் குடிவரவு குடியகல்வு துறை அலுவலகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் விண்ணப்பதார்ர்கள் நிற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க ஆன்லைன் முறைமை விரைவில் ஆரம்பிக்க  உள்ளதாக இலங்கை அரசின்  தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இலங்கை குடிமக்கள் ஆன்லைன் முலம் நேரத்தை முன்பதிவு செய்து கடவுச் சீட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும்.

தற்போது, குடிவரவு குடியகல்வுத் துறையிடம் சுமார் 50,000 கடவுச்சீட்டுகள் உள்ளன. நவம்பரில் இது 100,000 கடவுச்சீட்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கூடுதலாக டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகள் தேவை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.