ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்கும் வரலாற்றுப் போக்கு தவிர்க்க முடியாது:சீனா
2024-11-04 19:59:37

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 4ஆம் நாள் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்கும் வரலாற்றுப் போக்கு தவிர்க்க முடியாது. இதுவரை உலகத்தில் 183 நாடுகள் ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ளன. ஆனால் பலாவ் உள்ளிட்ட சில நாடுகள் தைவான் பிரதேசத்துடன் கூறப்படும் “தூதாண்மை உறவை” நிலைநிறுத்தி வருகின்றன. இது, இந்த நாடுகளின் சொந்தமான நலன்களை மீறியதோடு, சீன அரசுரிமையையும் ஊறுபடுத்தியுள்ளது என்றார்.

இந்த நாடுகள் சர்வதேச சட்டத்தின் பொறுப்பை நிறைவேற்றி, தங்களது அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குப் பொருந்திய முடிவு எடுக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.