பாரம்பரிய பண்பாட்டின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொண்ட வெளிநாட்டு மாணவர்கள்
2024-11-04 19:41:23

சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் ரஷியா, கொலம்பியா, பல்கேரியா, தஜிகிஸ்தான், இலங்கை, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31ஆம் நாள் ஷுயூங் மாவட்டத்தில் அமைந்துள்ள பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பரவல் தளத்தில் பயணம் மேற்கொண்டு, சீனாவின் மியௌ இனப் பண்பாடு மற்றும் டை-சாயம்(tie-dye) கைவினை நுட்பத்தை அறிந்து கொண்டனர்.

உள்ளூர் கைவினை தொழிலாளரின் உதவியுடன், மாணவர்கள் டை-சாயம்(tie-dye) கலைப் பொருட்களைத் தயாரித்து, சீனப் பாரம்பரிய பண்பாட்டின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொண்டனர்.

கடந்த பல ஆண்டுகளின் வளர்ச்சியுடன், ஷுயூங் மாவட்டத்தின் டை-சாயம்(tie-dye) நுட்பம் ஒரு புகழ்பெற்ற சின்னமாக மாறியுள்ளது. இதன் மூலம், உள்ளூர் சிறுபான்மை தேசிய இன மக்கள் மற்றும் வறிய மக்கள் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.