பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
2024-11-04 16:53:01

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 4ஆம் நாள் கூறுகையில், பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டம் நவம்பர் 6, 7 ஆகிய நாட்களில் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கவுள்ளார். கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவரும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர் என்றார்.