© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் கடந்த திங்கள்கிழமை பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த்தில் 22 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா பகுதியில் காலை 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பொத்கி என்ற பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் "இறந்தவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளத்தை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.