இத்தாலியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பிரதிநிதிக் குழு பயணம்
2024-11-04 10:37:06

இத்தாலி செனட் அவையின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், கட்டுப்பாடு கண்காணிப்பு கமிட்டியின் செயலாளருமான லீசி, தலைமையிலான பிரதிநிதிக் குழு அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் 2ஆம் நாள் வரை இத்தாலியில் அதிகாரப்பூர்வ நட்புப் பயணம் மேற்கொண்டது. அவர்கள் ரோம் நகரில் இத்தாலியின் செனட் அவைத் தலைவரான இக்னாசியோ லா ரூஸ்ஸ, இத்தாலித் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி ஆகியோரைப் முறையே சந்தித்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது லீசி கூறுகையில், இவ்வாண்டு சீனாவுக்கும் இத்தாலிக்கும் இடையே பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை மாதத்தில் சீனாவில் பயணம்  மேற்கொண்ட இத்தாலித் தலைமை அமைச்சர் ஜார்ஜியா மெலோனியுடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சிக்குரிய திசையை காட்டினார். மேலும், பலதரப்புவாதத்தின் பேணிக்காப்பது, காலநிலை மாற்றச் சமாளிப்பு, உலகப் பொருளாதார மீட்சியை முன்னெடுப்பது முதலிய பிரச்சினைகளில் சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரந்தபட்ட பொது நலன்கள் உண்டு. சீன-ஐரோப்பிய உறவின் ஆரோக்கியமான நிலையான வளர்ச்சியை முன்னேற்ற சீனா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட விரும்புவதாகவும் லீசி தெரிவித்தார்.

படம்: XINHUA NEWS