© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, நவம்பர் 4ஆம் நாள் 1:24 மணியளவில் சென்சோ-18 விண்கலம், டோங்ஃபெங் தரையிறங்கும் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சென்சோ-18 விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்களான யே குவாங்ஃபு, லீ சுங் மற்றும் லீ குவாங்சு ஆகியோர் நல்ல உடல் நிலையில் இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து சென்சோ-18 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலப் பணி, முழுமையான வெற்றியைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று விண்வெளி வீரர்களும் 192 நாட்களுக்கு சுற்றுப்பாதையில் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அவர்கள் இரண்டு முறை விண்வெளிக் கலத்தை விட்டு வெளியேறி புதிய நேரச் சாதனையைப் படைத்துள்ளனர்.