© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் நவம்பர் 4ஆம் நாள் ஷாங்காயில் 7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கேற்ற தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கொள்முதலாளர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். சீனச் சந்தை மீது நம்பிக்கை கொண்டு சீனாவிலுள்ள முதலீட்டைத் தொடர்ந்து விரிவாக்கி உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கு மேலும் பெரிய பங்களிப்பு ஆற்றுவதாக வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அனைவரின் உரைகளைக் கேட்ட பிறகு, லீச்சியாங் கூறுகையில், சீனச் சந்தை இன்னும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைசிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். சீனா, சந்தை நுழைவை மேலும் தளர்த்துவதோடு, வணிக சூழலையும் தொடர்ந்து மேம்படுத்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையில் தொடர்ந்து வேரூன்றி பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் தாராள வர்த்தகத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும், உலகப் பொருளாதாரத்தின் புதிய உந்து ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்றும் லீச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.
படம்: XINHUA