இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய சிறப்பு தட்டம்மை தடுப்பூசி திட்டம் நவம்பர் 9 வரை நடைபெறவுள்ளது,
2024-11-05 19:03:56

இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய  சிறப்பு தட்டம்மை தடுப்பூசி திட்டம் நவம்பர் 9 வரை நடைபெறவுள்ளது, இது சமீப காலங்களில் தட்டம்மை நோயால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களை இலக்காகக் கொண்டு  தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணரான ஹசித திசேரா, நாடு முழுவதும் உள்ள 12 மாவட்டங்களில் இந்த திட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தார்.

இலங்கையில் தட்டம்மை நோய் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு சில பகுதிகளில் தட்டம்மை நோய் பாதிப்பிற்கு ஆளானதாக திசேரா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு காரணங்களுக்காக, தட்டம்மை தடுப்பூசி  போடப்படாத இளைஞர்களை இலக்காக இது கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

2020 மற்றும் 2022 க்கு இடையில் உலகில் நோய்த்தடுப்பின் வீழ்ச்சி பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளை பாதித்த நிலையில் இலங்கையிலும் தட்டம்மை நோய் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுனிசெப் செய்தி வெளியிட்டது.