சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் துவக்க விழாவில் லீ ச்சியாங் உரை
2024-11-05 19:10:49

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 7ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மற்றும் ஹோங் ச்சியாவ் சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியை நடத்துவது, திறப்பு மற்றும் ஒத்துழைப்பை சீனா விரிவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். தற்போதைய உலகில், ஒருதரப்புவாதமும், பாதுகாப்புவாதமும் தெளிவாக தலைதூக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், திறப்பில் ஊன்றி நின்று, திறப்பை விரிவாக்கி, நீண்டகால அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அமைப்பு முறை திறப்பை சீனா மேலும் விரிவாக்கும். மிக பெரிய அளவிலான சந்தையை மேலும் விரிவாக்க சீனா விரும்புகிறது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து சர்வதேச பொருளாதார அமைப்பில் உள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நெருக்கமாக்கி, திறந்த உலகப் பொருளாதாரத்தை கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

மலேசியா, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், மங்கோலியா, செர்பியா ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்கள் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினர்.