7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
2024-11-06 10:06:59

6 நாட்கள் நடைபெறும் 7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. இப்பொருட்காட்சியின் முக்கிய பகுதியாக, 7ஆவது ஹொங் ச்சியாவோ சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டம் அதே நாள் நடைபெற்றது. உயர் நிலை திறப்பில் ஊன்றி நின்று, சகிப்புத்தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தை மேம்படுத்துவது என்ற தலைப்பிலான இந்த மன்றக் கூட்டத்தில் மொத்தம் 19 துணை மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் உலக வர்த்தக அமைப்பும் சீனாவும் என்ற கிளை மன்றம் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் உலக வர்த்தக அமைப்பின் வளர்ச்சி அனுபவமும் அதன்வெளிப்பாடும் இந்த கிளை மன்றத்தில் மீள்ளாய்வு செய்யப்பட்டன. உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த பிறகு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல தரப்புகள் முழுமையாக உறுதிப்படுத்தின. உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தின் முக்கிய துறைகள், தனது அமைப்பு முறை ரீதியிலான திறப்பைச் சீனா நிதானமாக விரிவுபடுத்துவது முதலிய பிரச்சினைகள் குறித்து அவை கலந்துரையாடல் நடத்தியுள்ளன.