வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் சீனச் சந்தை
2024-11-06 10:19:52

7வது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5ம் நாள் முதல் 11ம் நாள் வரை சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகிறது. 152 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசியல், வணிகம் மற்றும் கல்வியியல் துறைகளின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 1500 பேர் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இவை, சீனச் சந்தை மற்றும் இறக்குமதி பொருட்காட்சியின் ஈர்ப்பாற்றலை மெய்பித்துள்ளது. பலதரப்புகள் திறந்த மனதுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் பொது விருப்பமும் இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவின் பெரும் சந்தைக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கின்றன. அண்மை காலமாக, சீன அரசு, ஒரு தொகுதி ஊக்கக் கொள்கைகளை வெளியிட்டு, உள்நாட்டுத் தேவையின் உள்ளார்ந்த ஆற்றலை விடுவித்துள்ளது. அதே வேளையில், புதிய மற்றும் தரமிக்க உற்பத்தி ஆற்றலின் வளர்ச்சி முன்னெடுப்பு, இறக்குமதி பொருட்காட்சிக்கு மேலதிக புத்தாக்கச் சக்தியை ஊட்டுகிறது.

திறப்புத் தன்மை வாய்ந்த உலக பொருளாதாரக் கட்டுமானத்துக்கு மதிப்புமிக்க மேடையாகத் திகழும் இறக்குமதி பொருட்காட்சி, பல தரப்பின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றிக்கான ஒத்த கருத்துகளை ஒருங்கிணைக்கிறது. சீனா, உலகின் வளரும் நாடுகளுடன் இணைந்து வளர்ச்சி அடைவதற்கும், அது புதிய உந்து விசை அளித்து, பாதுகாப்புவாதத்தைப் பெரிதும் எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.