குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன நிதியுதவியுடன் 1,996 வீடுகள் அமைக்க இலங்கை அனுமதி
2024-11-07 16:32:26

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1,996 வீடுகளை கட்டமைக்க இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் செய்தித்தொடர்பாளர் விஜித ஹேரத் புதன்கிழமை அறிவித்தார்.

இலங்கையின் தலைநகரான கொழும்பின் மூன்று புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் கட்டப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நகர மேலாண்மை மற்றும் வீடமைப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் தேனுகா விதானகமகேவின் கூற்றுப்படி, இலங்கையில் 7 இலட்சத்து 89 ஆயிரத்து 242 குடும்பங்கள் நிரந்தர வீடமைப்பு இன்றி உள்ளன என்று 2023 ஆம் ஆண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.