சீனாவின் சரக்கு வர்த்தக மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு
2024-11-08 16:07:52

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகமாகும். அவற்றிலுள்ள ஏற்றுமதி தொகை 20 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடு அதிகமாகும். இறக்குமதி தொகை 15 இலட்சத்து 22 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.2 விழுக்காடு அதிகமாகும் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் நவம்பர் 7ஆம் நாள் அறிவித்தது.

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 10 திங்கள் காலத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி தொகை 16 இலட்சத்து 94 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும். ஆசியான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி தொகை 5 இலட்சத்து 67 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.8 விழுக்காடு அதிகமாகும். அதே காலகட்டத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பில் 15.7 விழுக்காட்டை வகிக்கின்றது. ஆசியான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக தனது நிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றது. இதைத் தவிர, பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கையின் பிற உறுப்பு நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 10 இலட்சத்து 74 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகமாகும்.