ஜி20 உச்சி மாநாட்டுக்கான சீனாவின் எதிர்பார்ப்பு
2024-11-08 18:54:57

ஜி20 குழுவின் தலைவர்களின் 19வது உச்சிமாநாடு விரைவில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 8ஆம் நாள் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கெடுப்பது, பலதரப்புவாதத்துக்கான சீனாவின் உறுதியான ஆதரவையும், ஜி20 குழுவின் ஒத்துழைப்புக்கான சீனாவின் பெரும் முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டியுள்ளது. தற்போது, உலக வளர்ச்சி அறைக்கூவல்களைச் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மன்றக்கூட்டமான ஜி20 குழு, உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவதற்கு இயக்காற்றலை ஊட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் எதிர்பார்க்கின்றன என்றார்.

மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நடப்பு உச்சிமாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களுடன் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்ளவுள்ளார். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது, திறந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குதல், தொடரவல்ல வளர்ச்சியை ஆதரிப்பது ஆகிய துறைகளில் நடப்பு உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.