ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விருப்பம்
2024-11-08 19:48:06

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களின்  அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் பெருவின் லிமா நகரில் நடைபெறவுள்ளது. 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார், இக்கூட்டத்தின் மீது சீனா கொண்டுள்ள எதிர்பார்ப்பை அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொள்வது, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சீனா மேற்கொள்ளும் முக்கிய அரசுத் தலைவரின் தூதாண்மை நிகழ்வாகும். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தி, சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தி, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான சீனாவின் கொள்கை மற்றும் கருத்தை விவரிக்கவுள்ளார் என்றும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இக்கூட்டம் ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றி, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பை விரைவுபடுத்துவதற்கு புதிய இயக்கு ஆற்றலை உட்புகுத்தி, ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.