தென்சீனக் கடல் தொடர்பான பிலிப்பைன்ஸின் புதிய சட்டத்தை சீனா எதிர்க்கிறது
2024-11-09 18:48:14

பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் கடல்சார் மண்டல சட்டம் உள்ளிட்ட இரண்டு புதிய சட்டங்களில் கையெழுத்திட்டது குறித்து, சீனாவின் உச்ச சட்டமியற்றல் அமைப்பான சீனத் தேசிய மக்கள் பேரவையைச் சேர்ந்த வெளியுறவுக் குழு நவம்பர் 8ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கையில் கூறியதாவது,

8ஆம் நாள் பிலிப்பைன்ஸ் வெளியிட்ட புதிய சட்டங்களின்கீழ், சீனாவின் ஹூவாங்யான் தீவு, நன்ஷா தீவுகளின் பெரும்பகுதி மற்றும் அதன் கடற்பரப்புகளை பிலிப்பைன்ஸ் அரசு தனது கடல் மண்டலங்களில் கடல்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய இறையாண்மையையும் கடல்சார் உரிமைகள் மற்றும் நலன்களையும் இது கடுமையாக மீறியுள்ளதால், சீனத் தேசிய மக்கள் பேரவை இதை உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பகுதிகள் மீதான சீனாவின் இறையாண்மை, கடல்சார் உரிமை மற்றும் நலன்களுக்கு, போதுமான வரலாற்று மற்றும் சட்ட ஆதாரங்கள் கொண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டது.

மேலும், பிலிப்பைன்ஸ் ஒருதலைப்பட்சமாக தற்காலிக நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது, ஐ.நா.கடல்சார் பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. இதனால், இந்த தீர்ப்பு சட்டவிரோதமானதாகவும் பயனற்றதாகவும் உள்ளது. சீனா இதை ஏற்றுக்கொள்வதில்லை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.