பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை கருத்தில் கொள்கிறது : டிரம்பின் இடைக்காலக் குழு
2024-11-09 18:16:51

எரியாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி நிரலை, அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் இடைக்காலக் குழு வகுத்து கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது உட்பட காலநிலை மற்றும் எரியாற்றல் தொடர்பான நிர்வாக கட்டளைகள் மற்றும் அரசுத் தலைவரின் அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த இடைக்காலக் குழு தயார் செய்துள்ளது என்று தகவல் அறிந்தவர்கள் 6 பேரின் கூற்றை மேற்கோள் காட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நவம்பர் 8ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

மேலும், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமையகம் மற்றும் அதைச் சேர்ந்த 7000 ஊழியர்களை வாஷிங்டன் டி.சி.யில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து இந்த இடைக்காலக் குழுவில் சிலர் விவாதித்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.