தென் சீனக் கடல் தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசின் அரசியல் நோக்கம்
2024-11-10 20:04:30

பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் நவம்பர் 8ஆம் நாளன்று, கடல்சார் மண்டலச் சட்டம், தீவுக்கூட்டக் கடல் வழி சட்டம் ஆகியவற்றில் கையெழுத்திட்டார். புதிய சட்டங்களின்கீழ், சீனாவின் ஹூவாங்யான் தீவு, நன்ஷா தீவுகளின் பெரும்பகுதி மற்றும் அதன் கடற்பரப்புகளை பிலிப்பைன்ஸ் அரசு தனது கடல் மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் வெளியிட்ட புதிய கடல்சார் மண்டலச் சட்டம், முன்வைக்கப்பட்டது முதல் கையெழுத்திடப்பட்டது வரை, மொத்தம் 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், தீவுக்கூட்டக் கடல் வழி சட்டமும் நீண்டகாலமாக தயார்ப்படுத்தப்பட்ட பின் வெளியிடப்பட்டுள்ளது. இப்போழுது பிலிப்பைன்ஸ் அரசு இந்த சட்டங்களை வெளியிட்டதன் காரணம் என்ன? இது குறித்து, சீனாவின் தென் சீனக் கடல் ஆய்வகத்தைச் சேர்ந்த நிபுணர் சென் சியாங் மியாவ் கூறுகையில், அமெரிக்க பொது தேர்தல் நிறைவுபெற்ற நாளுக்கு மறு நாளில் தான், இந்த இரண்டு சட்டங்கள் கையெழுத்திடப்பட்டதை, பிலிப்பைன்ஸ் அரசு முன்கூடியே நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் அரசு இப்படி செய்ததற்கான மூன்று நோக்கங்களை சென் சியாங் மியாவ் விளக்கமாக கூறினார். முதலாவதாக, கொந்தளிப்பான சர்வதேச சூழ்நிலையையும், சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க பொது தேர்தலையும் பயன்படுத்தி, மசோதாவில் கையெழுத்திடுவதால் பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் இருந்து பொதுக் கருத்து ரீதியான அழுத்தத்தைக் குறைக்க பிலிப்பைன்ஸ் அரசு விரும்புகின்றது. இரண்டாவதாக, தென் சீனக் கடலில் தனது சட்டவிரோதமான செயல்பாடுகளை மறைக்க பிலிப்பைன்ஸ் அரசு முயல்கின்றது. இதன் மூலம்,  தென் சீனக் கடல் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க அமெரிக்காவின் புதிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். மூன்றாவதாக, அமெரிக்காவின் புதிய அரசின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் வகையில் உள் நோக்கமும் பிலிப்பைன்ஸுக்கு உள்ளது.

இந்த இரண்டு சட்டங்களின் அறிமுகம், பிலிப்பைன்ஸ் அரசியல் தந்திரம் மூலம் கடல்சார் உரிமை மற்றும் நலன்களை சட்டவிரோதமாக விரிவாக்கும் உள்நோக்கம் ஆகியவற்றை வெளிகாட்டியது. மேற்கூறிய கடல் பகுதிகள் மீதான சீனாவின் இறையாண்மை, கடல்சார் உரிமை மற்றும் நலன்களுக்கு, போதுமான வரலாற்று மற்றும் சட்ட ஆதாரங்கள் உண்டு. 1898ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் (பாரிஸ் உடன்படிக்கை), 1900ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ், பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசம் வரையறுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூவாங்யான் தீவு, நன்ஷா தீவுகளின் பெரும்பகுதி மற்றும் அதன் கடற்பரப்புகள் ஆகியவை பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசத்துக்கு வெளியே உள்ளன.

மேலும், ஐ.நா.கடல்சார் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிலிப்பைன்ஸ், மற்ற நாடுகளின் இறையாண்மையும் கடுமையாக மீறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.