ஐ.நா. பாதுகாப்பு அவையின் பன்முக மற்றும் முறையான சீர்திருத்தத்துக்கு சீனா ஆதரவு
2024-11-12 11:31:33

79வது ஐ.நா. பேரவையின் கூட்டத்தொடரில்   பாதுகாப்பு அவை இடங்கள் மற்றும் சீர்திருத்தம் போன்றவைக் குறித்த ஆலோசணைக் கூட்டம் 11ஆம் நாள் நடைபெற்றது. பாதுகாப்பு அவையின் பன்முக மற்றும் அர்த்தமுள்ள முறையான சீர்திருத்தங்களை சீனா ஆதரிப்பதாக சீனாவின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அவையின் சீர்திருத்தம் சர்வதேச அரசியலின் நடைமுறைக்கு ஏற்ப அமைய வேண்டும். உலக பல துருவமயமாக்கம், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் உலகின் தெற்கில் உள்ள நாடுகளின் எழுச்சி ஆகியவற்றின் வரலாற்றுப் போக்குகளுக்கு இணங்க வேண்டும். பாதுகாப்பு அவையின் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்காக, இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினருடன் சீனா தொடர்ந்து கூட்டு முயற்சி எடுக்கும் என்று ஐ.நா.விலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ ட்சுங் தெரிவித்தார்.