சீன-ரஷியாவின் நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்
2024-11-12 18:40:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர் வாங் யீ, ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் நவம்பர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-ரஷியாவின் 19ஆவது சுற்று நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும்இரு நாட்டு உறவு மற்றும் இரு நாட்டு வளர்ச்சியின் பொது நிலைமையைப் பேணிகாக்கவும், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிதானத்தைக் கூட்டாக மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

வாங் யீ கூறுகையில்,  சீனாவும் ரஷியாவும் சுமுகமான அண்டை நாட்டுறவு, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் கோட்பாட்டைப் பின்பற்றி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு, அந்தந்த நாட்டின் கவனத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரித்து, அண்டை பெரிய நாடுகளுக்கிடையிலான உறவை உருவாக்குவதில் புதிய முன்மாதிரியாக திகழ்கின்றன என்றார்.

சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, இரு தரப்புகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஐ.நா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் முதலிய அமைப்பு முறைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, இரு நாட்டு உறவு, புதிய மற்றும் பெரிய வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்ற ரஷியா விரும்புவதாக ஷோய்கு தெரிவித்தார்.