© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இவ்வாண்டின் நவம்பர் 11ஆம் நாளில், சீனா முழுவதும் உள்ள அஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவை நிறுவனங்கள் கையாண்ட தூதஞ்சல் பொதிகளின் மொத்த எண்ணிக்கை 70கோடியே 10இலட்சத்தை எட்டியது. இது, சாதாரண தினசரி அளவின் 151விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட, இதுவும் 9.7விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தரவுகளில் கணக்கிடப்பட்டது.
கடந்த அக்டோபர் 21ஆம் நாளிலிருந்து, உள்நாட்டில் விரைவு தூதஞ்சல் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது. சராசரி தினசரி கையாண்ட பொதிகளின் எண்ணிக்கை 58கோடிக்கு மேலாகும். தொடர்ந்து விரிவடைந்து வரும் தூதஞ்சல் சேவைத் துறையானது, ஆன்லைன் சந்தை நுகர்வுக்கான தேவை அதிகரித்துள்ளதை வெளிகாட்டியுள்ளது.