சூடானில் 76 விழுக்காட்டு மக்கள் எவ்வித உதவியையும் பெறவில்லை
2024-11-13 11:27:05

ஐ.நா. வளர்ச்சி திட்ட அலுவலகம், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை நவம்பர் 12ஆம் நாள் அறிக்கை ஒன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளன. சூடானில் ஆயுத மோதல் வெடித்த பிறகு, மனித நேய உதவி பெறும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால் 76 விழுக்காட்டு மக்களுக்கு எவ்வித உதவியும் சென்றடையவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஆயுத மோதல் பாதிப்பு காரணமாக, சூடான் தற்போது உலகில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும். 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நகர்ப்புற மக்கள் தொகையில் வேலை வாய்ப்பில்லா விகிதம் 45 விழுக்காட்டைத் தாண்டும். 88%க்கும் மேற்பட்ட நகர்ப்புற குடும்பங்களில் குறைந்தது ஒரு குழந்தை பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறுவார்கள். நகர்ப்புற குடும்பங்களில் 63.6% குழந்தைகள் பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.