© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள பீக்கிங் பல்கலைக்கழகம், ச்சிங்ஹுவா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நவம்பர் திங்கள் பிற்பகுதியில் தைவானில் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக மா யிங்ஜியூ நிதியம் அண்மையில் தெரிவித்தது. இது குறித்து சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜு ஃபெங்லியான் 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை பெருநிலப்பகுதி தரப்பு மிகவும் வரவேற்று, ஆக்கமுடன் முன்னேற்றி வருகிறது என்றார். மேலதிக தைவான் இளைஞர்கள் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டு, தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.