ஈரான் மற்றும் ரஷிய வங்கிகளின் பணம் பரிவர்த்தனை அமைப்புமுறை இணைப்பு
2024-11-13 19:50:56

ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் வங்கிகளுக்கிடையே பணம் செலுத்தும் முறைகள் நவம்பர் 11ஆம் நாளில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன என்றும், இரு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருதரப்பு பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலரைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முக்கிய காலடி எடுத்து வைத்துள்ளது என்றும் ஈரானின் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இது தொடர்பாக தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரான் மத்திய வங்கி இயக்குநர் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்தனர்.