ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பற்றிய கருத்துக்கணிப்பு
2024-11-13 15:19:51

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இவ்வாண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவாகும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதேசப் பொருளாதாரத்தை அதிகரிப்பது, பிரதேச ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது உள்ளிட்ட துறைகளில், இவ்வமைப்பு முன்னேற்றி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் வர்த்தக முதலீட்டுச் தாராளமயமாக்கல் மற்றும் வசதிமயமாக்கல் நிலையைப் பெரிதும் உயர்த்தியுள்ளது என்று 86.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். மேலும், பலதரப்புவாதம் மற்றும் பொருளாதார உலகமயமாக்கத்தில் பல்வேறு நாடுகள் ஊன்றி நின்று, திறந்த பொருளாதாரம் மற்றும் பிரதேச ஒத்துழைப்பு கட்டுக்கோப்பைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று 85.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.