காசா மனித நேய பேரழிவைத் தணிப்பதான இஸ்ரேல் கடமை
2024-11-13 11:14:02

மனித நேய நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உத்தரவாதம் செய்யும் வகையில், ஐ.நா. முதலிய மனித நேய நிறுவனங்களுடன் இஸ்ரேல் பன்முக ஒத்துழைப்பை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் நவம்பர் 12ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பவை கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேல் மனித நேய நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதோடு, ஐ.நா. மற்றும் மனித நேய நிறுவனங்களைக் குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

காசாவில் மனித நேய உதவிகளை விரிவுபடுத்துவதில் உள்ள மிகப்பெரிய அறைகூவல் பொருட்களின் பற்றாக்குறை அல்ல, மாறாக மனித நேய உதவி அனுமதிக்கப்படவில்லை. மனித நேயப் பொருட்கள் காசாவில் நுழைவதற்கான தடைகளை நீக்கும் வகையில், இஸ்ரேல் தனது எல்லை நுழைவு வாயில்களை உடனடியாக திறக்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது என்றார்.