சீன-லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே பொது மக்களுக்கு நலன் பயக்கும் ஒத்துழைப்புகள்
2024-11-13 20:09:08

சீனாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மேற்கொள்ளும்போது, வாழ்வாதாரம் தொடர்பான முக்கிய திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதை கருத்தில் கொள்கின்றோம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 13ஆம் நாள் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சீன மற்றும் பிரேசில் ஒத்துழைப்பின் கீழ், பிரேசிலின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் “பெலோ மான்டே யுஎச்வி டிரான்ஸ்மிஷன்” என்ற திட்டப்பணியானது, அந்நாட்டின் தொழில்துறை மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதோடு, 2கோடியே 20இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

தவிரவும், சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளில், சிறிய மற்றும் அழகான வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கோஸ்டாரிகாவின் இரண்டு நகரங்களில் சீனாவின் உதவியுடன் குடிநீர் வழங்கல் திட்டங்கள் மூலம், சுமார் 40 ஆயிரம் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே பொது மக்களுக்கு நன்மைகள் கொண்டு வரும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.