கோப்29 உச்சிமாநாட்டில் சீனத் துணை தலைமை அமைச்சர் உரை
2024-11-13 18:19:46

சீன அரசுத் தலைவரின் சிறப்பு பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவையின் துணை தலைமை அமைச்சருமான டிங் ஷுவே ஷியாங், நவம்பர் 12ம் நாள் அஜர்பைஜான் தலைநகர் பாகூவில் நடைபெற்ற உலக காலநிலை மாற்றம் குறித்த 29வது உச்சிமாநாட்டில்(COP29)பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், இவ்வாண்டு, காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நாவின் பொது ஒப்பந்தம் அமலாக்கப்பட்ட 30வது ஆண்டு நிறைவாகும். நடப்பு உச்சிமாநாட்டில் திருப்திகரமான சாதனைகளைப் பெற முன்னெடுப்போம். வளர்ந்த நாடுகள், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, பசுங்கூட வாயு வெளியேற்றத்தை முதலில் குறைக்க வேண்டும். வளரும் நாடுகள் இயன்றளவில் கார்பன் குறைப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய எரியாற்றலின் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்தை சர்வதேச சமூகம் பேணிக்காக்க வேண்டும். பல தரப்புகளுடன் இணைந்து நமது பொது வீடான பூமியைப் பாதுகாத்து, தூய்மை மற்றும் அழகான உலகத்தைக் கூட்டாகக் கட்ட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

படம்:Xinhua News