சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் வருடாந்த உற்பத்தி தொகை: ஒரு கோடிக்கும் மேல்
2024-11-14 19:50:38

சீனாவின் வாகனத் தொழில் சங்கம் நவம்பர் 14ஆம் நாள் முற்பகல் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் ஆண்டின் உற்பத்தி தொகை ஒரு கோடியை எட்டியுள்ளது. அதே வேளையில், உலகளவில் புதிய எரியாற்றல் வாகனங்களின் ஆண்டின் உற்பத்தி தொகை ஒரு கோடியைத் தாண்டும் முதல் நாடாக சீனா மாறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், சீனத் தேசிய நெடுநோக்கு வழிகாட்டல் அடிப்படையில், நூற்றுக்கு மேலான ஊக்குவிப்பு கொள்கைளை சீனா வழங்கியுள்ளது. உற்பத்திப் பொருட்களின் அறிவியல் தொழில் நுட்பம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்பட்டு வருகின்றன. சீனாவின் வாகனத் தொழில் துறையின் மாபெரும் வளர்ச்சியை இவை கூட்டாக முன்னேற்றியுள்ளன.