© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 14ஆம் நாள் தொடங்கியது. இதன் மூலம் 225 உறுப்பினர்கள் கொண்ட புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த முறை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடியே 70 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நடப்புத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு இலங்கையில் தேசியளவில் மொத்தமாக 13 ஆயிரத்திற்கும் மேலான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.