சர்ச்சையை விரிவாக்கக் கூடும் நடவடிக்கைகளைப் பிலிப்பைன்ஸ் நிறுத்த வேண்டும்:சீனா வேண்டுகோள்
2024-11-14 10:02:33

"கடற்பரப்பு மண்டலச் சட்டம்" மற்றும் "தீவுக்கூட்டக் கடல்வழிச் சட்டத்தை" குறித்து பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது நாள் பிலிப்பைன்ஸுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஜிலியன் நவம்பர் 13ஆம் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சீனா வரைந்து வெளியிட்ட ஹூவாங்யன் தீவுக்கான கடல் உரிமைப் பகுதியின் அடிப்படை கோடு குறித்த சீனாவின் நிலைப்பாட்டையும் தெரிவித்தார். அவரின் இந்நடவடிக்கை பிலிப்பைன்ஸ் வெளியிட்ட கடற்பரப்பு மண்டலச் சட்டத்துக்குத் தேவையான பதில் நடவடிக்கையாகும். அதோடு, சீன அரசு சட்டப்படி கடற்பரப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாகும். இது  சர்வதேசச் சட்டத்துக்கும் சர்வதேச நடைமுறைக்கும் பொருந்தியது. மேலும் இது தொடர்பில் சீனா சட்டப்படி தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, தனது உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாடு மற்றும், கடற்பரப்பு உரிமை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.