© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் இலகு ரகத் தொழிற்துறையின் உற்பத்தி நிதானமாக வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய மென்ரகத் தொழில் நிறுவனங்களின் வருமானம், 16 இலட்சத்து 52 ஆயிரம் கோடி யுவானாகும். அவற்றின் லாபம் 1 இலட்சத்து 2 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.2விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய இலகு ரகத் தொழிற்துறை சம்மேளனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.
புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய இலகு ரகத் தொழிற்துறையின் அதிகரிப்பு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகமாகும். அவற்றின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சந்தை அளவு நிதானமாக விரிவாகி வருகின்றது. முழு தொழிற்துறையின் ஏற்றுமதித் தொகை 68 ஆயிரத்து 216 கோடி அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.6விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.