© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு இவ்வாரத்தில் பெரு நாட்டில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளார்.
இவ்வுச்சி மாநாட்டில் திறப்பு, தாராளம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையுடைய வர்த்தகம், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சி, உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் 21 நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிக துறையினர்கள் விவாதம் நடத்தவுள்ளனர்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட கடந்த 35 ஆண்டுகளில் அவ்வமைப்பானது வர்த்தக முதலீட்டின் தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கம், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னேற்றி, இப்பிரதேசத்தின் பொருளாதார ஒருமைப்பாடு நிலையைத் தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. இப்பிரதேசத்திலுள்ள முக்கிய நாடான சீனா, இவ்வமைப்பின் ஒத்துழைப்புகளில் ஆக்கமுடன் கலந்து கொண்டு வருகிறது. அதன் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடுகளில் சீனா முன்வைத்த பல முன்மொழிவுகள் மற்றும் கருத்துகள், இப்பிரதேசத்தின் வளர்ச்சிப் போக்கிற்குப் பொருந்தியதாக விளங்கி, பெருமளவிலான ஆதரவைப் பெற்றுள்ளன. ஆசிய-பசிபிக் வளர்ச்சிக்கு இவை பெரும் வாய்ப்புகளை வழங்கியுள்ளதோடு ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புகளையும் மேலும் நெருக்கமாக்கியுள்ளன.