புதிதாக நிறுவப்பட்ட தெற்குலக சிந்தனை கிடங்கு ஒத்துழைப்பு கூட்டணி
2024-11-15 11:23:38

2ஆவது தெற்குலகச் சிந்தனை கிடங்கு உரையாடல் துவங்குவதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில், சீன ஊடகக் குழுமம், சீனச் சமூக அறிவியல் கழகம், ட்சிங்ஹுவா பல்கலைக்கழகம், ஃபூதான் பல்கலைக்கழகம், ரென்மின் பல்கலைக்கழகம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேலான சிந்தனைக் கிடங்குகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை கூட்டாக முன்வைத்த தெற்குலகச் சிந்தனை கிடங்கு ஒத்துழைப்புக் கூட்டணி நவம்பர் 14ஆம் நாள் நான்ஜிங் நகரில் நிறுவப்பட்டது.

ரஷியாவில் நடைபெற்ற “பிரிக்ஸ்+”தலைவர்களின் உரையாடல் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த முக்கிய முன்மொழிவுகளைச் செயல்படுத்தி, பல்வேறு நாடுகளின் பண்பாடு மற்றும் நாட்டின் ஆட்சிமுறை பரிமாற்றத்தை முன்னேற்றுவது, இக்கூட்டணியின் நோக்கமாகும். பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து உள்ளிட்ட 100க்கும் மேலான வளரும் நாடுகளைச் சேர்ந்த சிந்தனை கிடங்கு அறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள், சீனாவின் தொடர்புடைய பிரிவுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சிந்தனை கிடங்குகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 400க்கும் மேலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.