© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 15ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் அக்டோபர் மாதத்தில் சீனத் தேசியப் பொருளாதார செயல்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
தரவுகளின்படி, அக்டோபரில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில்களின் கூடுதல் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது, இது கடந்த மாதத்தை விட 0.1 சதவீதப் புள்ளி குறைந்து, 0.41 விழுக்காடு அதிகரித்துள்ளது. சேவைத் தொழில் உற்பத்திக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.3 விழுக்காடு உயர்ந்துள்ளது, இது முந்தைய மாதத்தை விட 1.2 சதவீதப் புள்ளி அதிகரித்துள்ளது. மேலும் நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை 4 லட்சத்து 53 ஆயிரத்து 960 கோடி யுவான் ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகரித்து, முந்தைய மாதத்தை விட 1.6 சதவீதப் புள்ளி உயர்ந்துள்ளது. சரக்குகளின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 3 லட்சத்து 70ஆயிரத்து 70 கோடி யுவான் ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்து, முந்தைய மாதத்தை விட 3.9 சதவீதப் புள்ளி உயர்ந்துள்ளது.