லிமாவில் நடைபெற்ற ஏபெக் அமைச்சர் நிலை கூட்டம்
2024-11-15 15:57:52

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்(ஏபெக்) அமைச்சர் நிலை கூட்டம், நவம்பர் 14ஆம் நாள் பெருவின் தலைநகரான லிமாவில் நடைபெற்றது. இதில், ஏபெக் அமைப்பைச் சேர்ந்த 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டு, பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக கொள்கைகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

பிரதேச பொருளாதார ஒருங்கிணைப்பை முன்னேற்றுதல், வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துதல், தொடரவல்ல வளர்ச்சியை, உள்ளடக்கிய மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள், இக்கூட்டத்தின் முன்முயற்சி முன்னுரிமைகளில் அடங்கும்.