உலகக் காலநிலை மாற்றக் கட்டுப்பாட்டை முன்னேற்றுவதில் சீனாவின் பங்கு
2024-11-15 11:26:01

புதிய காலச் சர்வதேசத் தகவல் தொடர்பு ஆய்வகத்தின் மூலம் சீன ஊடகக் குழுமம், சீன மக்கள் பல்கலைக்கழகம் ஆகியவை உலகக் காலநிலை தொடர்பாக உலகெங்கிலும் 38 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 7658 பேர் கலந்து கொண்டு பதிலளித்தனர். அவர்களுள் 83.5 விழுக்காட்டினர் உலக காலநிலைக் கட்டுபாட்டுக்குச் சீனா ஆற்றியுள்ள முயற்சிகளையும் பங்குகளையும் ஆக்கப்பூர்வமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளதாகவும்,  தூய்மையான அழகான உலகத்தைக் கூட்டாக உருவாக்குவதற்குரிய நம்பிக்கையையும் வலிமையையும் சீனா கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை முன்னேற்றுவதில் சர்வதேச சமூகத்திற்குச் சீனா முன்மாதிரியாக திகழ்கின்றது என்று 80.3 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.