ஷிச்சின்பிங்-ஜப்பான் தலைமையமைச்சர் சந்திப்பு
2024-11-16 19:49:38

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் மாலை, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பெரு நாட்டின் லிமாவில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட போது ஜப்பானின் தலைமையமைச்சர் ஷிகெரு இஷேபாவைச் சந்தித்துரையாடினார். ஜப்பானுடன் இணைந்து, இருநாட்டு நெடுநோக்கு பரஸ்பர நலன் தரும் உறவை பன்முகங்களிலும் விரைவுபடுத்தி கூட்டாக முயற்சித்து, புதிய யுகத்தின் தேவைகளுக்கும் பொருந்திய ஆக்கப்பூர்வமான நிலையான சீன-ஜப்பான் உறவை உருவாக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீனாவின் வளர்ச்சி உலகிற்குப் பொருந்திய வாய்ப்பாக உள்ளது. ஜப்பான், சீனாவுடன் இணைந்து இருதரப்பும் உருவாக்கியுள்ள முக்கிய பொது கருத்துக்களை திட்டமிட்ட கொள்கைகளிலும் உண்மையான செயல்பாடுகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை பற்றி ஷிகெரு இஷேபா கூறுகையில், 1972ஆம் ஆண்டு ஜப்பான்-சீன கூட்டறிக்கையின் நிலைப்பட்டை ஜப்பான் தரப்பு உறுதிப்படுத்துகிறது. சீனாவுடன் பல்நிலைகளில் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தி, பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தி தொடர்பை அதிகரித்து, பொருளாதார வர்த்தகம், பசுமை வளர்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு மேலதிக சாதனைகள் பெறுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.